ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் பால் விற்பனை செய்யும் பிளிப்கார்ட் கடும் எதிர்ப்பில் பால் உற்பத்தியாளர்கள்
March 16, 2026

பிளிப்கார்ட் நிறுவனம் ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் பால் வழங்கும் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விளம்பர உத்தியானது விவசாயிகளின் உழைப்பை கொச்சைப்படுத்துவதாகவும், பல தசாப்தங்களாக இயங்கி வரும் பால் கூட்டுறவு அமைப்புகளை சீர்குலைப்பதாகவும் பெங்களூரு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (BAMUL) கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சுமார் 14.5 லட்சம் லிட்டர் பால் இவ்வாறு விற்பனை செய்யப்பட்டதால், உள்ளூர் கூட்டுறவு சங்கங்களின் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமருக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளதுடன், இந்திய போட்டி ஆணையத்திடம் புகாரும் அளிக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களின் இத்தகைய விலை குறைப்பு போர் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்கும் என சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.