ஒரு கிலோ 85,000 ரூபாய்! உலகின் மிக விலையுயர்ந்த இந்த காய்கறி வாங்க பெரும் பணக்காரர்களுக்கே சவால்

உலகின் மிக விலையுயர்ந்த காய்கறியாக ‘ஹாப் ஷூட்ஸ்’ (Hop Shoots) அறியப்படுகிறது, இதன் விலை கிலோவுக்கு சுமார் ₹85,000. இது சாதாரண மக்களின் வாங்கும் திறனுக்கு அப்பாற்பட்டது. இதன் அதிக விலைக்கு முக்கியக் காரணம், இதற்குத் தேவைப்படும் அதிக உழைப்பு மற்றும் சிறப்பு வாய்ந்த காலநிலை ஆகும். Humulus lupulus என்ற அறிவியல் பெயரைக் கொண்ட இத்தாவரம் கேனாபேசி குடும்பத்தைச் சேர்ந்தது.
ஐரோப்பா, கனடா, சீனா, அமெரிக்கா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் இது பயிரிடப்படுகிறது. இதன் இளம் தளிர்கள் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட காய்கறியாக உண்ணப்படுகின்றன. அதேசமயம், ஹாப் கூன்கள் எனப்படும் இதன் பூக்கள் பீர் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது, ஹாப் ஷூட்ஸின் உலகளாவிய சந்தை மதிப்பு சுமார் 8.1 பில்லியன் டாலராக உள்ளது, இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15.1 பில்லியன் டாலராக உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.