ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலிக்காதது ஏன் என்பது குறித்து சூர்யகுமார் யாதவ் ஓபன் டாக்
March 16, 2026

இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ், ஒருநாள் கிரிக்கெட் வடிவம் தனக்கு ஒருபோதும் புரிந்ததில்லை என்றும் அது மிகவும் சவாலானது என்றும் தெரிவித்துள்ளார். மூன்று வெவ்வேறு பாணிகளில் பேட் செய்ய வேண்டிய கட்டாயமே தனது சிரமத்திற்குக் காரணம் என்று அவர் ஒப்புக்கொண்டார். 34 ஒருநாள் இன்னிங்ஸ்களில் அவரது சராசரி வெறும் 26 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
தமது கிரிக்கெட் பயணம் குறித்துப் பேசிய அவர், ரஞ்சி டிராபியில் நீண்ட காலம் விளையாடிய போதிலும் டி20 வடிவமே தனக்குச் சரியாக அமைந்ததாகக் கூறினார். ஒருநாள் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட முயற்சி செய்தும் அது கைகூடவில்லை என்றும், இறுதியில் தலையெழுத்துப்படியே எல்லாம் நடக்கும் என்றும் அவர் யதார்த்தமாகப் பகிர்ந்துள்ளார்.