ஒருதலைக்காதலால் இளம்பெண்ணின் உள்ளாடைகளை திருடிய வாலிபர் மத்திய பிரதேசத்தில் கைது
March 14, 2026

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் இளம்பெண் ஒருவரின் உள்ளாடைகளைத் திருடிய குற்றத்திற்காக 25 வயது இளைஞரை சிமன்கஞ்ச் மண்டி போலீஸார் கைது செய்தனர். வீட்டில் உலர்த்தப்படும் ஆடைகள் மாயமானதால் சிசிடிவி அமைக்கப்பட்ட நிலையில், இளைஞரின் விசித்திரமான செயல் வெளிச்சத்திற்கு வந்தது. விசாரணையில் தான் அந்தப் பெண்ணை காதலிப்பதாகவும், அவர் பெயரை மார்பில் பச்சை குத்தியிருப்பதாகவும் அந்த வாலிபர் தெரிவித்துள்ளார்.
காவல் ஆய்வாளர் கஜேந்திர பச்சௌரி கூறுகையில், ஆதாரங்களின் அடிப்படையில் இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இளைஞரின் இந்த செயலை காதலென கூறுவதை ஏற்க முடியாது என்றும், இது வக்கிரமான மனநிலை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விசித்திரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.