ஒன்றுடன் ஒன்றை கூட்டினால் ஒன்றுதான் வடகொரியாவின் விசித்திரமான கல்வி முறை குறித்த திடுக்கிடும் தகவல்கள்

வடகொரியாவின் கல்வி முறையில் கணிதம்கூட அரசியல் பிரச்சாரத்திற்காக பயன்படுத்தப்படுகிறது. அங்குள்ள பள்ளிகளில் 1+1=1 என்று கற்பிக்கப்படுவதாக அந்நாட்டிலிருந்து வெளியேறிய சார்ல் ரியூ தெரிவித்துள்ளார். அதிபர் கிம் ஜாங் உன் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசைக்க முடியாத அதிகாரம் மற்றும் தேசப்பற்றை வலியுறுத்தவே இத்தகைய விசித்திரமான கல்வி கற்பிக்கப்படுகிறது. மாணவர்களின் அறிவாற்றலை விட ஆட்சியாளர்களுக்கு விசுவாசமாக இருப்பதற்கே அங்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
சிறைபிடிக்கப்பட்டபோது பசியின் கொடுமையால் உயிருள்ள எலிகளை உண்டு உயிர் பிழைத்த கொடுமைகளை ரியூ விவரித்துள்ளார். ஆட்சியாளர்களுக்கு எதிராக செயல்பட்டால் மிக மோசமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. கல்வியின் பெயரால் நடத்தப்படும் இந்த மூளைச்சலவை, கிம் ஜாங் உன்னின் சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்துவதற்கான ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.