ஒடிசா அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்த சோகம்
March 16, 2026

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 11 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் மோகன் சரண் மாஜி இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சார்பில் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு 2 லட்சம் ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். தற்போது காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.