ஒடிசா அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு 10 நோயாளிகள் உயிரிழப்பு
March 16, 2026

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திர பஞ்ச் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் திங்கள்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அதிகாலை 3 மணியளவில் ஐசியூ பிரிவில் உள்ள ஏசியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தீ பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அடர் புகையினால் வார்டு முழுவதும் சூழப்பட்டதால் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளிடையே பெரும் பதற்றம் நிலவியது.
இந்த துயர சம்பவத்தில் 10 நோயாளிகள் உயிரிழந்ததை முதல்வர் மோகன் சரண் மாஜி உறுதிப்படுத்தியுள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் நிவாரண உதவி அறிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைத்தன. இந்த விபத்து குறித்து முழுமையான விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.