ஒடிசாவில் நிலைகுலைந்த மாவோயிஸ்ட் இயக்கம் 11 பேர் அதிரடி சரண்

ஒடிசாவில் நிலைகுலைந்த மாவோயிஸ்ட் இயக்கம் 11 பேர் அதிரடி சரண்

மண்டல கமிட்டி உறுப்பினர் நகுல் உட்பட 11 மாவோயிஸ்ட்கள் ஒடிசா டிஜிபி குரானியா முன்னிலையில் ஏ.கே-47 ரக துப்பாக்கிகளுடன் சரணடைந்தனர். தேடப்பட்டு வந்த நகுலுக்கு 22 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு படையினரின் தொடர் தேடுதல் வேட்டையினால் இவர்கள் ஆயுதங்களை ஒப்படைக்க முன்வந்துள்ளனர்.

மூத்த தலைவர்களின் இந்த சரணடைதல் மாவோயிஸ்ட் இயக்கம் பலவீனமடைந்துள்ளதை காட்டுவதாக டிஜிபி தெரிவித்தார். ஒடிசாவில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் கணிசமாகக் குறைந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கை வனப்பகுதிகளில் அமைதியை நிலைநாட்ட உதவும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *