“ஐ லவ் யூ”: மரணத்தின் பிடியில் இருந்த விமானியின் உருக்கமான கடைசி செய்தி!

ஜார்ஜியாவில் நடுவானில் விமானத்தின் என்ஜின் திடீரென செயலிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விமானம் அதிவேகமாக தரையை நோக்கி விழுந்த நிலையில், தனது மரணம் நிச்சயம் என்பதை உணர்ந்த விமானி ரோஜர், தனது மனைவிக்காக ஒரு உருக்கமான செய்தியை அனுப்பினார். அதில், “என் மனைவியிடம் சொல்லுங்கள், நான் அவளை மிகவும் நேசிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இருப்பினும், விமானியின் சாதுர்யமான செயலால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் அவர் விமானத்தை அவசரமாகத் தரையிறக்கினார். அப்போது சாலையில் சென்ற கார் மீது விமானம் மோதியதில் பரபரப்பு ஏற்பட்டாலும், அதிருஷ்டவசமாக விமானிகள் இருவரும் மற்றும் பொதுமக்கள் காயமின்றி உயிர் தப்பினர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், விமானப் பராமரிப்புப் பணிகள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.