ஐபிஎல் 2026 ஏலத்தில் கோடிகளை குவித்து சாதனை படைத்த டாப் 5 நட்சத்திர வீரர்கள்

ஐபிஎல் 2026 ஏலத்தில் கோடிகளை குவித்து சாதனை படைத்த டாப் 5 நட்சத்திர வீரர்கள்

மார்ச் 28 முதல் தொடங்கவுள்ள 19-வது ஐபிஎல் சீசனில் அதிக சம்பளம் பெறும் வீரர்களில் ரிஷப் பண்ட் 27 கோடி ரூபாயுடன் முதலிடம் பிடித்துள்ளார். அவரைத் தொடர்ந்து பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் 26.75 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தா அணியின் கேமரூன் கிரீன் மற்றும் ஹைதராபாத் அணியின் கிளாசன் ஆகியோரும் அதிக ஊதியம் பெறும் பட்டியலில் உள்ளனர். ஆர்சிபி அணியின் தூணான விராட் கோலி இந்த சீசனில் 21 கோடி ரூபாய் ஊதியம் பெறுகிறார். களத்தில் பேட் மற்றும் பந்தால் மோதிக்கொள்ளும் முன்பே, இந்த வீரர்களின் வருமானம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *