ஐபிஎல் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி தரும் அதிரடி முடிவு
March 27, 2026

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வரும் மார்ச் 29 அன்று ஐபிஎல் 19வது சீசன் தொடங்குகிறது. கடந்த ஆண்டு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 11 ரசிகர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, இந்த ஆண்டு கோலாகலமான தொடக்க விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் நினைவாக மைதானத்தில் 11 இருக்கைகள் நிரந்தரமாக ஒதுக்கப்பட்டு சிறப்பு நினைவுப் பலகையும் திறக்கப்பட உள்ளது.
முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக 7 கோடி ரூபாய் மதிப்பிலான ஏஐ தொழில்நுட்ப கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தொடக்க விழா ரத்து செய்யப்பட்டாலும், இறுதிப் போட்டியின் போது பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று ஐபிஎல் நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.