ஐசிசி கோப்பையை பாகிஸ்தான் திருடியா கொண்டு வரப்போகிறது என கொந்தளித்த காம்ரான் அக்மல்
March 16, 2026

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி இழந்ததையடுத்து முன்னாள் வீரர் காம்ரான் அக்மல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இருதரப்பு தொடர்களிலேயே வெற்றி பெற முடியாத இந்த அணி, ஐசிசி கோப்பையை என்ன திருடியா கொண்டு வரப்போகிறீர்கள் என்று அவர் நிர்வாகத்தையும் வீரர்களையும் கடுமையாக விமர்சித்துள்ளார்.
தொடர்ச்சியாக நான்கு ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட்டின் தரம் மிகவும் குறைந்துவிட்டதாகவும், சிறிய அணிகள் கூட இப்போது பாகிஸ்தானை எளிதாக வீழ்த்திவிடும் நிலையில் உள்ளதாகவும் அக்மல் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.