ஐக்கிய அரபு அமீரகத்தில் தவறான தகவல்களைப் பரப்பிய 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் கைது

ஐக்கிய அரபு அமீரகத்தில் தவறான தகவல்களைப் பரப்பிய 19 இந்தியர்கள் உட்பட 35 பேர் கைது

ஐக்கிய அரபு அமீரகத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் மற்றும் தவறான தகவல்களைப் பரப்பிய குற்றத்திற்காக 19 இந்தியர்கள் உட்பட 35 பேரைக் கைது செய்ய அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் வகையில் ஆத்திரமூட்டும் கருத்துகளைப் பகிர்ந்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அட்டர்னி ஜெனரல் ஹமத் சைப் அல் ஷம்சி தெரிவித்துள்ளார்.

விசாரணையில் கைதானவர்கள் பல்வேறு குழுக்களாகச் செயல்பட்டு ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்த போலி வீடியோக்களைப் பரப்பியது தெரியவந்தது. இதில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். அமீரகத்தின் கடுமையான சைபர் சட்டங்களின்படி, இவர்களுக்குக் குறைந்தபட்சம் ஒரு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 1 லட்சம் திர்ஹாம் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *