ஏர் இந்தியா விமானங்களுக்கு சர்வதேச தடை விதிக்கும் அபாயம்

ஏர் இந்தியா விமானங்களுக்கு சர்வதேச தடை விதிக்கும் அபாயம்

ஐரோப்பிய விமான போக்குவரத்து பாதுகாப்பு முகமையின் அதிரடி சோதனையில் ஏர் இந்தியா விமானங்களில் கடுமையான தொழில்நுட்ப கோளாறுகள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது இந்த நிறுவனத்தின் பிழை விகிதம் 1.96 சதவீதத்தை எட்டியுள்ளது, இது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த அளவு 2 சதவீதத்தை தாண்டினால் ஏர் இந்தியா நிறுவனத்தின் சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அகமதாபாத்தில் 260 பேர் உயிரிழந்த கொடூரமான விமான விபத்திற்கு விமானியின் தவறு காரணமல்ல, மாறாக விமானத்தில் ஏற்கனவே இருந்த தொழில்நுட்ப கோளாறுகளே காரணம் என அமெரிக்க புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. போயிங் 787 ரக விமானங்களில் மின் கசிவு மற்றும் புகை போன்ற பிரச்சனைகள் நீண்டகாலமாக இருந்துள்ளன. இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீளவும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அந்நிறுவனம் போர்க்கால அடிப்படையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *