ஏப்ரல் முதல் உயர்கிறது டாடா மோட்டார்ஸ் வர்த்தக வாகனங்களின் விலை
March 16, 2026

உற்பத்தி செலவு அதிகரித்துள்ள சூழலில் வர்த்தக வாகனங்களின் விலையை ஏப்ரல் 1 முதல் 1.5 சதவீதம் வரை உயர்த்துவதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. இந்த விலை மாற்றம் வாகனத்தின் மாடல் மற்றும் வகையைப் பொறுத்து மாறுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள கூடுதல் சுமையைக் குறைக்க நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதற்கிடையே மும்பை பங்குச் சந்தையில் டாடா மோட்டார்ஸ் பங்குகள் 2.82 சதவீதம் உயர்ந்து ரூ.437.75 ஆக வர்த்தகத்தை நிறைவு செய்தன.