ஏடிஎம்மில் இனி 10 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்பதால் சில்லறை தட்டுப்பாட்டுக்கு விடிவுகாலம்

ஏடிஎம்மில் இனி 10 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்பதால் சில்லறை தட்டுப்பாட்டுக்கு விடிவுகாலம்

பொதுமக்களின் நீண்டகால சில்லறை தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசும் இந்திய ரிசர்வ் வங்கியும் இணைந்து ஏடிஎம் இயந்திரங்கள் மூலம் 10, 20 மற்றும் 50 ரூபாய் நோட்டுகளை வழங்க திட்டமிட்டுள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனை காலத்திலும் நிலவும் சில்லறை தட்டுப்பாட்டை நீக்க இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஏடிஎம்களில் சிறிய நோட்டுகளை வழங்கும் வசதி இல்லாததால் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய சோதனை முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. போதிய நோட்டுகள் கையிருப்பில் உள்ளதாகவும், இந்த புதிய முறை அமலுக்கு வரும்போது பொதுமக்கள் ஏடிஎம்களிலேயே எளிதாக சில்லறை நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும் மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *