ஏஐ செயலிகளின் கோளாறால் கசிந்த எண்பது லட்சம் கோப்புகள் உங்கள் ரகசியங்கள் பாதுகாப்பானதா

கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஏஐ செயலிகளின் பாதுகாப்பு குறைபாட்டால் சுமார் பன்னிரண்டு டெராபைட் அளவிலான தனிப்பட்ட தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளன. வீடியோ ஏஐ ஆர்ட் ஜெனரேட்டர் போன்ற செயலிகளின் தவறான கட்டமைப்பால் பதினைந்து லட்சம் புகைப்படங்கள் மற்றும் சுமார் நான்கு லட்சம் வீடியோக்கள் எவ்வித பாதுகாப்பும் இன்றி பொதுவெளியில் கிடைப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். கூகுள் கிளவுட் ஸ்டோரேஜில் ஏற்பட்ட இந்த பிழையினால் கடவுச்சொல் இல்லாமலேயே எவரும் இந்தத் தகவல்களைப் பெறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கோடிங்கில் செய்யப்பட்ட சிறிய தவறுகளால் சுமார் எண்பது லட்சம் கோப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் கேஒய்சி விவரங்கள் கசிந்துள்ளன. இதில் ஆதார் அட்டை, தொலைபேசி எண்கள் மற்றும் முகவரிகள் போன்ற மிக முக்கியமான தகவல்கள் அடங்கும் என சைபர் நியூஸ் தெரிவித்துள்ளது. இந்தியா உட்பட இருபத்தைந்து நாடுகளைச் சேர்ந்த பயனர்களின் தரவுகள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக தற்போது அந்தச் செயலிகள் நீக்கப்பட்டிருந்தாலும் பயனர் தரவுகளின் பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது.