எல்லையில் பிஎஸ்எஃப் வீரர் கடத்தல்! அடர் மூடுபனியை பயன்படுத்தி வங்கதேசத்தினர் அட்டூழியம்

எல்லையில் பிஎஸ்எஃப் வீரர் கடத்தல்! அடர் மூடுபனியை பயன்படுத்தி வங்கதேசத்தினர் அட்டூழியம்

கூச் பெஹார் எல்லையில் மாடு கடத்தலைத் தடுக்க முயன்ற பிஎஸ்எஃப் வீரர் வேத் பிரகாஷ் வங்கதேச சமூக விரோதிகளால் கடத்தப்பட்டார். சனிக்கிழமை அதிகாலை அடர் மூடுபனியைப் பயன்படுத்தி, அவரை எல்லைக்கு அப்பால் இழுத்துச் சென்ற கும்பல், வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் (BGB) ஒப்படைத்தது.

பிஎஸ்எஃப் செக்டர் கமாண்டர் உடனடியாக பிஜிபி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வீரரை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளார். வீரர் நலமுடன் இருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, வீரரைத் தாயகம் கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *