எம்ஜிஆர் குறித்த சர்ச்சை பேச்சுக்கு தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் பகிரங்க மன்னிப்பு

எம்ஜிஆர் குறித்த சர்ச்சை பேச்சுக்கு தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத் பகிரங்க மன்னிப்பு

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் குறித்து அவதூறாகப் பேசிய தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத், தற்போது வீடியோ வெளியிட்டு மன்னிப்புக் கேட்டுள்ளார். சமீபத்திய விழாவில், நடிகர் காந்தாராவின் வாள் சண்டையைக் கண்டு எம்ஜிஆரே பயப்படுவார் என அவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த ராஜேந்திர பிரசாத், எம்ஜிஆர் திரையுலகின் கடவுள் போன்றவர் என்றும், தவறுதலாகப் பேசியதற்காகத் தன்னை மன்னிக்குமாறு உருக்கமாகக் கேட்டுக்கொண்டார். இனி எப்போதும் இதுபோன்ற தவறுகளைச் செய்ய மாட்டேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *