எடப்பாடி தொகுதியில் செல்வகணபதி போட்டி?

எடப்பாடி தொகுதியில் செல்வகணபதி போட்டி?

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சேலத்தில் தங்கள் செல்வாக்கை நிலைநாட்ட பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சிட்டிங் எம்.பி.யான செல்வகணபதியை எடப்பாடி தொகுதியில் நிறுத்தும் திட்டம் குறித்து தீவிரமாக பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியை அவரது சொந்த தொகுதியிலேயே முடக்கி விடலாம் என்று திமுக தலைமை கணக்கு போடுகிறது.

முன்னாள் அதிமுக பிரமுகரான செல்வகணபதி, எடப்பாடி பழனிசாமியின் பலம் மற்றும் பலவீனங்கள் குறித்து நன்கு அறிந்தவர் என்பதால், அவர் களமிறக்கப்பட்டால் பழனிசாமிக்கு கடுமையான நெருக்கடி கொடுக்க முடியும் என்று ஸ்டாலின் நம்புவதாக கூறப்படுகிறது. சேலம் மாவட்ட அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இம்முடிவு, எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி தொகுதியில் ஒரு பரபரப்பான போட்டியை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *