எடப்பாடியின் கோட்டையை தகர்க்கிறதா பாஜக, தவெக வருகையால் அதிமுகவிற்கு செக்

தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக தலைமை கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. 118 தொகுதிகளில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டிருந்தாலும், நடிகர் விஜய்யின் தவெக-வை கூட்டணிக்குள் கொண்டு வர பாஜக தீவிரம் காட்டி வருகிறது. இதன் மூலம் அதிமுக போட்டியிடும் இடங்களைக் குறைத்து, தேர்தலுக்குப் பின் ‘கிங் மேக்கர்’ ஆக உருவெடுக்க டெல்லி தலைமை வியூகம் வகுத்துள்ளது.
பாஜகவின் இந்த இரட்டை வேட அரசியலால் கொங்கு மற்றும் தென் மாவட்டங்களில் அதிமுகவின் செல்வாக்கு சரியக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் எச்சரிக்கின்றனர். சீட் பங்கீட்டில் பிடிவாதம் காட்டும் பாஜகவின் நிபந்தனைகளுக்கு எடப்பாடி பணிவாரா அல்லது அதிமுகவின் அரசியல் அடையாளத்தை மீட்டெடுப்பாரா என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு. இந்த அதிகாரப் போட்டி தமிழக தேர்தல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் எனத் தெரிகிறது.