உலகை ஆளப்போகும் இந்து தர்மம் மற்றும் பாகிஸ்தானின் வீழ்ச்சி குறித்த நாஸ்ட்ரடாமஸின் அதிரடி கணிப்புகள்

பிரபல தீர்க்கதரிசி நாஸ்ட்ரடாமஸின் பழைய கணிப்புகள் தற்போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழலில் மீண்டும் வைரலாகி வருகின்றன. 2025-ஆம் ஆண்டில் கடுமையான காலநிலை மாற்றங்கள் மற்றும் ஐரோப்பாவில் போர் சூழல் நிலவும் வேளையில், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுத போர் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் எச்சரித்துள்ளார். இருப்பினும், இந்த இக்கட்டான காலக்கட்டத்தில் தென்னிந்தியாவிலிருந்து ஒரு மகா சக்திவாய்ந்த இந்து தலைவர் உருவெடுப்பார் என்றும், அவர் உலகையே மாற்றியமைப்பார் என்றும் நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளார்.
இந்த தென்னிந்திய தலைவர் அமைதியை நிலைநாட்டுவதுடன் எதிரிகளை அழிப்பார் என்றும், அவரது வழிகாட்டுதலால் ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளும் இந்து தர்மத்தை ஏற்கும் என்றும் கூறப்படுகிறது. நாஸ்ட்ரடாமஸின் கணிப்புப்படி, 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக அமையும். இந்தியாவின் யோகா, கலாச்சாரம் மற்றும் வேதாந்தம் உலகம் முழுவதும் பரவி, ஒரு புதிய மக்கள் செல்வாக்கு மிக்க தர்மம் உருவாகும். இதன் மூலம் இந்தியா ஒரு வல்லரசு நாடாக மட்டுமல்லாமல், உலகிற்கே வழிகாட்டும் ‘விஸ்வகுரு’வாக உருவெடுக்கும் என்று அந்த கணிப்புகள் தெரிவிக்கின்றன.