உலகக்கோப்பை வெற்றியில் மத மோதல் கீர்த்தி ஆசாத்தின் கருத்துக்கு ஹர்பஜன் சிங் கடும் கண்டனம்
March 11, 2026

டி20 உலகக்கோப்பையை வென்ற வீரர்கள் கோவிலுக்குச் சென்றது குறித்து முன்னாள் வீரர் கீர்த்தி ஆசாத் எழுப்பியுள்ள கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெற்றி நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானது என்றும், கோப்பையை ஏன் மசூதி அல்லது தேவாலயங்களுக்கு கொண்டு செல்லவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள ஹர்பஜன் சிங், கடவுள் நம்பிக்கை என்பது தனிப்பட்ட விருப்பம் என்றும் வீரர்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்றும் கூறியுள்ளார். விளையாட்டை விட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுப்பது வருத்தமளிப்பதாகவும், இந்த வரலாற்று வெற்றியை அனைவரும் இணைந்து கொண்டாட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.