உறங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய், மிளகாய் தூளைத் தூவிய மனைவி!

உறங்கிக் கொண்டிருந்த கணவர் மீது கொதிக்கும் எண்ணெய், மிளகாய் தூளைத் தூவிய மனைவி!

தெற்கு டெல்லியின் மதன்ஹிர் பகுதியில், குடும்பத் தகராறு காரணமாக கணவர் மீது மனைவி கொதிக்கும் எண்ணெய் ஊற்றி, மிளகாய் தூளைத் தூவிய பயங்கர சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மருந்து நிறுவன ஊழியரான 28 வயது தினேஷ், அக்டோபர் 3ஆம் தேதி அதிகாலையில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளானார். இந்த கொடூரத் தாக்குதலால் வலி தாங்காமல் அவர் அலறியபோது, மேலும் கொதிக்கும் எண்ணெயை ஊற்றுவதாக மனைவி மிரட்டியதாக தினேஷ் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அண்டை வீட்டார், தினேஷை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர், அங்கு அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தினேஷின் புகாரின் அடிப்படையில், அவரது மனைவி மீது காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. ஆரம்ப கட்ட விசாரணையில், எட்டு வருட திருமண வாழ்வில் அவர்களுக்குள் அடிக்கடி சண்டைகள் நடந்து வந்தது தெரியவந்துள்ளது. இச்சம்பவத்திற்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட மனைவி தலைமறைவாகிவிட்டார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *