உயிரிழந்த பின்னும் 6 பேருக்கு வாழ்வளித்த 22 வயது இளைஞனின் நெகிழ்ச்சியூட்டும் தியாகம்

உயிரிழந்த பின்னும் 6 பேருக்கு வாழ்வளித்த 22 வயது இளைஞனின் நெகிழ்ச்சியூட்டும் தியாகம்

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்த விவசாயி மோனிக்ராஜ் மின்கசிவு விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இந்த சோகமான சூழலிலும் அவரது பெற்றோர் மகனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்து மற்றவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தனர்.

அவரது நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள் மற்றும் கண்கள் தானமாக வழங்கப்பட்டதன் மூலம் ஆறு பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். தமிழக அரசின் உறுப்பு தான ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இந்த அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடைபெற்றன. மறைந்த மோனிக்ராஜின் உடல் நேற்று அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *