உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட ம.தி.மு.க-விற்கு தி.மு.க அழுத்தம் கொடுப்பதால் துரை வைகோ கடும் அதிருப்தி
March 10, 2026

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் ம.தி.மு.க-வை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட தி.மு.க தலைமை வலியுறுத்தி வருகிறது. கடந்த முறை தனிச் சின்னத்தில் போட்டியிட்ட துரை வைகோ, தற்போதும் அதே நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். ஆனால், முதலமைச்சர் ஸ்டாலினின் நேரடி கோரிக்கையை ஏற்பது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ ஆலோசித்து வருவதாகத் தெரிகிறது.
மாநில கட்சி அங்கீகாரத்தைப் பெற 12 இடங்களை ம.தி.மு.க இலக்காகக் கொண்டாலும், 4 முதல் 5 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க தி.மு.க முன்வந்துள்ளது. கட்சியின் தனித்துவத்தை இழக்க விரும்பாத துரை வைகோ, தி.மு.க-வின் இந்த நிபந்தனையை ஏற்கக் கூடாது எனத் தலைமையிடம் போர்க்கொடி தூக்கியுள்ளார். இதனால் கூட்டணிக் பேச்சுவார்த்தையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.