உடல் எடையை குறைக்க மேஜிக் மருந்தா? புற்றுநோய் அபாயம் குறித்து எச்சரிக்கை!

உடல் எடையை குறைக்க மேஜிக் மருந்தா? புற்றுநோய் அபாயம் குறித்து எச்சரிக்கை!

உடல் எடையை வேகமாக குறைக்க ஓசெம்பிக் (Ozempic) அல்லது விகோவி (Wegovy) போன்ற மருந்துகளை தேடுகிறீர்களா? எச்சரிக்கை! மருத்துவர்களின் ஆலோசனையின்றி இவற்றை பயன்படுத்துவது உயிருக்கே ஆபத்தாக முடியலாம்.

டைப் 2 நீரிழிவு மற்றும் அதீத உடல் பருமன் சிகிச்சைக்காக கண்டறியப்பட்ட இந்த மருந்துகள், தற்போது உடல் எடையை குறைக்க பலரால் தவறாக பயன்படுத்தப்படுகின்றன. நிபுணர்களின் கூற்றுப்படி, முறையான வழிகாட்டுதல் இன்றி இவற்றை உட்கொள்வதால் உடலில் உள்ள தசை அளவு 39 சதவீதம் வரை குறைந்து உடல் தளர்ச்சியடையக்கூடும். மேலும், இது தைராய்டு புற்றுநோய் மற்றும் கணைய கோளாறுகள் போன்ற தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தும் அபாயம் கொண்டது.

யார் தவிர்க்க வேண்டும்?

  • கணைய அழற்சி (Pancreatitis) அல்லது பித்தப்பை பிரச்சனை உள்ளவர்கள் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
  • பி.எம்.ஐ (BMI) 35-க்கும் குறைவாக இருப்பவர்கள் மருத்துவர் பரிந்துரையின்றி இதனை எடுக்கக்கூடாது.

இந்த மருந்துகள் வயிற்றில் உணவை நீண்ட நேரம் வைத்திருந்து பசியை குறைக்கின்றன. ஆனால், முறையான உடற்பயிற்சி இன்றி இவற்றை பயன்படுத்துவது நன்மையை விட தீமையையே அதிகம் தரும். எனவே, விளம்பரங்களை பார்த்து ஏமாறாமல், ஆரோக்கியமான முறையில் எடையை குறைக்க நிபுணரின் ஆலோசனையை பெறுவதே சிறந்தது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *