உக்ரைன் முதல் பெண்மணியின் விமானம் ஜெய்ப்பூரில் தரையிறங்கியது

உக்ரைன் முதல் பெண்மணியின் விமானம் ஜெய்ப்பூரில் தரையிறங்கியது

ஜப்பான் சென்று கொண்டிருந்த உக்ரைன் முதல் பெண்மணி ஒலெனா செலென்ஸ்காவின் விமானம், எதிர்பாராத விதமாக ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. எரிபொருள் நிரப்புவதற்காக ஞாயிற்றுக்கிழமை காலை விமானம் அங்கு நின்றது. அவருடன் உயர்மட்ட அரசு அதிகாரிகள் உட்பட 23 பேர் கொண்ட குழு இருந்தது.

காலை 6:30 மணியளவில் அவர்களது விமானம் ஜெய்ப்பூரில் தரையிறங்கியதாகவும், குழுவினர் விஐபி ஓய்வறையில் காத்திருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் நிரப்பிய பிறகு, காலை 8:15 மணிக்கு விமானம் மீண்டும் ஜப்பானுக்கு புறப்பட்டது. இந்த திடீர் தரையிறக்கம் பொதுமக்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *