உக்ரைனுக்கு டீசல் ஏற்றுமதியை நிறுத்துகிறதா இந்தியா? டெல்லியிலிருந்து கொள்முதலை ஏன் நிறுத்துகிறது கீவ்
September 17, 2025

உக்ரைனின் எரிசக்தி ஆலோசனை நிறுவனமான என்-கோர்ட் (Enkorr), அக்டோபர் 1 முதல் இந்தியாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்வதை உக்ரைன் நிறுத்த உள்ளது என தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதைத் தொடர்வதே இந்த முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்திய டீசலில் ரஷ்ய பொருட்கள் கலந்திருக்கிறதா என்பதை கண்டறிய, இந்திய டீசல் முழுவதையும் ஆய்வகத்தில் சோதிக்க உக்ரைன் பாதுகாப்பு அமைப்புகள் உத்தரவிட்டுள்ளன. மேலும், கடந்த ஆகஸ்ட் மாதம் உக்ரைனின் மொத்த டீசல் இறக்குமதியில் 18% அதாவது, 1,19,000 டன் இந்திய டீசல் உக்ரைனுக்கு இறக்குமதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.