உகாதி வாழ்த்துடன் திராவிட மாடல் 2.0 அரசு அமைய அறைகூவல் விடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

உகாதி வாழ்த்துடன் திராவிட மாடல் 2.0 அரசு அமைய அறைகூவல் விடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்

தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்களுக்கு உகாதி வாழ்த்துகளைத் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தென்மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுக்க ஒற்றுமையுடன் செயல்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். ஹிந்தி திணிப்பு மற்றும் நிதிப் பகிர்வு அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைந்து போராட உகாதி நாளில் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

வரும் மே மாதம் அமையவுள்ள ‘திராவிட மாடல் 2.0’ அரசிற்கு இந்த உகாதி ஒரு தொடக்கமாக அமையட்டும் என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மாநில சுயாட்சியை நிலைநாட்டவும், திராவிடப் பண்பாட்டைக் காக்கவும் இந்த ஒற்றுமை மேலும் வலுபெற வேண்டும் என அவர் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *