ஈரான் விவகாரத்தில் டிரம்பின் கோரிக்கையை ஏற்று களமிறங்கும் பிரிட்டன்

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் வைத்துள்ள கடல் கண்ணிவெடிகளை அகற்ற அமெரிக்கா விடுத்த கோரிக்கையை பிரிட்டன் ஏற்றுள்ளது. அந்தப் பகுதியில் கண்ணிவெடிகளைக் கண்டறிந்து அழிக்கும் ரோபோக்களை நிலைநிறுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். நட்பு நாடுகளின் உதவியை டிரம்ப் எதிர்பார்த்த நிலையில், பிரிட்டனின் இந்த முடிவு சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த பதற்றமான சூழலால் அதிபர் டிரம்பின் சீனப் பயணம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக அமெரிக்க நிதித்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே துபாய் விமான நிலையத்திற்கு அருகே நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் மற்றும் இஸ்ரேலின் தரைவழித் தாக்குதல்களால் மத்திய கிழக்கில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படலாம் என எண்ணெய் நிறுவனங்கள் எச்சரித்துள்ளதால் உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.