ஈரான் விவகாரத்தில் டிரம்ப் மற்றும் ஜேடி வான்ஸ் இடையே மோதல் நிலவுவதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல்

ஈரான் விவகாரத்தில் டிரம்ப் மற்றும் ஜேடி வான்ஸ் இடையே மோதல் நிலவுவதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல்

ஈரான் தொடர்பான விவகாரத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் ஜேடி வான்ஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகமான சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. குறிப்பாக ஈரான் போர் குறித்த வான்ஸின் அமைதி மற்றும் முந்தைய நிலைப்பாடுகள் டிரம்பின் உத்திகளுக்கு எதிராக இருக்கலாம் எனத் தெரிகிறது. கடந்த காலங்களில் ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளை வான்ஸ் எதிர்த்தது தற்போது வெள்ளை மாளிகையில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது.

அரசியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, 2028 அதிபர் தேர்தலை கருத்தில் கொண்டே வான்ஸ் இத்தகைய நடுநிலையான போக்கை கடைபிடிக்கலாம் என கருதப்படுகிறது. போரினால் அமெரிக்காவிற்கு ஏற்படும் நீண்டகால பாதிப்புகள் குறித்து அவர் ஏற்கனவே எச்சரித்திருந்தார். தற்போது டிரம்பின் கருத்துகளை மட்டும் மேலோட்டமாக ஆதரிக்கும் வான்ஸ், தனது எதிர்கால அரசியல் திட்டங்களுக்காக மிக கவனமாக காய் நகர்த்தி வருவதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *