ஈரான் மோதலால் பார்முலா ஒன் பந்தயங்கள் ரத்து வேகத்தடையில் ரசிகர்கள்
March 15, 2026

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா கிராண்ட் பிரிக்ஸ் பந்தயங்களை எஃப்1 நிர்வாகம் ரத்து செய்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பு மற்றும் தளவாடப் போக்குவரத்து சிக்கல்களைக் கருத்தில் கொண்டு இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் பார்முலா 2, 3 மற்றும் எஃப்1 அகாடமி போட்டிகளும் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த ரத்து நடவடிக்கையால் மார்ச் 29 முதல் மே 3 வரை பந்தய அட்டவணையில் நீண்ட இடைவெளி ஏற்பட்டுள்ளது. மாற்று இடங்களாக இமோலா மற்றும் போர்டிமாவ் பரிசீலிக்கப்பட்டாலும் கால நெருக்கடியால் அவை நிராகரிக்கப்பட்டன. இதனால் நடப்பு சீசனில் மொத்த பந்தயங்களின் எண்ணிக்கை 22 ஆக குறைந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளின் போர் சூழல் பார்முலா ஒன் சீசனை பெரும் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளியுள்ளது.