ஈரான் மீது அமெரிக்கா நடத்தப்போகும் மிகப்பெரிய அளவிலான தாக்குதல்

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டு நடவடிக்கை பத்தாவது நாளை எட்டியுள்ள நிலையில் பதற்றம் அதிகரித்துள்ளது. செவ்வாயன்று ஈரான் மீது இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா நடத்தவுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் எச்சரித்துள்ளார். அதிநவீன குண்டுவீச்சு விமானங்கள் மற்றும் துல்லியமான உளவுத் தகவல்களின் உதவியுடன் இந்தத் தாக்குதல் நடத்தப்படும். கடந்த 24 மணி நேரத்தில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்கள் குறைந்துள்ளதை வாஷிங்டன் தனது வெற்றியாகக் கருதுகிறது.
அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முரணான கருத்துக்களால் போர் குறித்து சர்வதேச அளவில் குழப்பம் நீடிக்கிறது. பிப்ரவரி 28 அன்று தொடங்கிய இந்த ரத்தக் களரி மோதலில் ஈரானின் பல பாதுகாப்பு அலுவலகங்கள் மற்றும் ஏவுகணை ஏவுதளங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் கலந்தாலோசித்த பின்னரே போரின் எதிர்காலம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. தற்போது ஒட்டுமொத்த மத்திய கிழக்கும் போர்க்களமாக மாறியுள்ளது.