ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்த வாய்ப்பு

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா தனது போர் விமானங்களையும் போர்க்கப்பல்களையும் நிலைநிறுத்தி வருகிறது. எஃப்-22 ராப்டர், எஃப்-35சி உள்ளிட்ட அதிநவீன போர் விமானங்கள் மற்றும் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போன்ற பிரம்மாண்ட போர்க்கப்பல்கள் ஈரான் எல்லைக்கு அருகில் குவிக்கப்பட்டுள்ளன. இதற்காக அமெரிக்கா ஒரு பிரத்யேக ‘ஏர் பிரிட்ஜ்’ உருவாக்கி, தொடர்ந்து ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக விடுக்கப்பட்ட 10 நாள் கெடுவை ஈரான் நிராகரித்துள்ளதால், இந்த வாரமே அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அமெரிக்காவின் போர்க்கப்பல்களை கடலில் மூழ்கடிக்கப் போவதாக ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த மோதல் போக்கினால் உலக அளவில் பெரும் பதற்றம் நிலவுகிறது.