ஈரான் மீதான தாக்குதலை தள்ளிவைப்பதாக டிரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரான் மீதான தாக்குதலை தள்ளிவைப்பதாக டிரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரான் எரிசக்தி நிலையங்கள் மீது ஏப்ரல் 6 வரை தாக்குதல் நடத்தப்படாது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் அரசின் வேண்டுகோளை ஏற்று, ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த 5 நாள் தடையை 10 நாட்களாக டிரம்ப் நீட்டித்துள்ளார். இதற்குப் பிரதிபலனாக ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே தற்போது அமைதி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக டிரம்ப் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தான், துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர தீவிரமாக முயற்சித்து வருகின்றன. இந்த தற்காலிக போர்நிறுத்தம் மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தை சற்று குறைத்துள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *