ஈரான் போர் சில வாரங்களில் முடிவுக்கு வரும் என ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி தகவல்

ஈரான் போர் சில வாரங்களில் முடிவுக்கு வரும் என ட்ரம்ப் நிர்வாகம் அதிரடி தகவல்

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் மிக வேகமாக முன்னேறி வருவதாகவும், இன்னும் சில வாரங்களில் இந்த போர் முடிவுக்கு வரலாம் என்றும் அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. நான்கு முதல் ஆறு வாரங்களுக்குள் இலக்கை எட்டிவிட முடியும் என அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த மோதலால் சர்வதேச எரிபொருள் சந்தையில் கடும் விலை ஏற்றமும் பதற்றமும் நிலவி வருகிறது.

இருப்பினும், அமெரிக்காவின் இந்த கருத்தை ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. தாங்கள் எவ்வித போர்நிறுத்த கோரிக்கையையும் விடுக்கவில்லை என்றும், தேவைப்பட்டால் நீண்ட காலத்திற்கு போரிட தயாராக இருப்பதாகவும் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். இதனால் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் தொடர்ந்து போர் பதற்றம் நீடிக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *