ஈரான் போரில் வெற்றி பெற்றதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே பல்டி அடித்த டிரம்ப்

ஈரான் போரில் வெற்றி பெற்றதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே பல்டி அடித்த டிரம்ப்

ஈரான் போரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டணி வெற்றி பெற்றுவிட்டதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை அதிரடியாக அறிவித்தார். ஆனால் அடுத்த சில மணி நேரங்களிலேயே, அமெரிக்கா இன்னும் வெற்றி பெறவில்லை என அவர் முரண்பாடாகப் பேசியது சர்வதேச அளவில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 28 முதல் நீடிக்கும் இந்த மோதலில் அதிபரின் இத்தகைய முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் விவாதமாகியுள்ளன.

வெள்ளை மாளிகை தரப்பில் இந்த இரட்டை நிலைப்ப்பாட்டிற்கு இதுவரை முறையான விளக்கம் அளிக்கப்படவில்லை. டிரம்பின் இந்த திடீர் மாற்றத்தால் போரின் உண்மையான நிலை குறித்து உலக அரசியலில் ஒருவிதமான பதற்றம் தொற்றிக்கொண்டுள்ளது. போர் நிறுத்தத்திற்கான அறிகுறிகள் தென்படாத சூழலில், அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து நிபுணர்கள் தீவிரமாக உற்றுநோக்கி வருகின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *