ஈரான் தாக்குதலுக்கு எதிராக ஐநா சபையில் இந்தியா உட்பட 135 நாடுகள் கடும் கண்டனம்

ஈரான் தாக்குதலுக்கு எதிராக ஐநா சபையில் இந்தியா உட்பட 135 நாடுகள் கடும் கண்டனம்

மத்திய கிழக்கில் நிலவும் பதற்றமான சூழலில், ஈரான் நடத்திய தாக்குதலுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா தலைமையிலான இந்த கவுன்சிலில் உள்ள 15 நாடுகளில் 13 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இருப்பினும், ரஷ்யா மற்றும் சீனா இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. ஹார்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ள நிலையில், அண்டை நாடுகளின் இறையாண்மையை மீறுவதை ஏற்க முடியாது என தீர்மானம் வலியுறுத்துகிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் நிலைப்பாட்டைப் பின்பற்றி, இந்தியா இந்தத் தீர்மானத்தின் இணை ஆதரவு நாடாக இணைந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், வங்கதேசம் உட்பட மொத்தம் 135 நாடுகள் ஈரானின் இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் மூலம் சர்வதேச அளவில் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. பொதுமக்களின் பாதிப்பு மற்றும் சர்வதேச சட்ட மீறல்கள் குறித்து இந்தத் தீர்மானம் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *