ஈரான் தாக்குதலால் பற்றி எரியும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மத்திய கிழக்கில் போர் தீவிரம்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போர் நான்காவது வாரத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் தனது தாக்குதல் இலக்கை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பக்கம் திருப்பியுள்ளது. கடந்த 11 நாட்களில் மட்டும் அரபு நாடுகள் மீது 3,100-க்கும் மேற்பட்ட ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் துபை விமான நிலையம் மற்றும் முக்கிய எண்ணெய் வயல்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் மற்றும் விமானப் போக்குவரத்துத் துறை பல மில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்துள்ளது.
இந்த நெருக்கடிக்கு மத்தியில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது சமரசக் கொள்கையைக் கைவிட்டு அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்புப் படையில் இணைய முடிவு செய்துள்ளது. ஈரானுடனான தூதரக உறவைத் துண்டித்துள்ள எமிரேட்ஸ், தனது தூதர்களைத் திரும்ப அழைத்துள்ளது. மேலும், நாட்டின் பாதுகாப்பு தொடர்பான புகைப்படங்களைப் பரப்புபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இப்போரால் வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பதற்றம் நிலவுகிறது.