ஈரான் அமெரிக்கா இடையே போர் மேகம் சூழ்கிறது இந்தியர்கள் உடனடியாக வெளியேற தூதரகம் அதிரடி உத்தரவு
February 23, 2026

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மோதல் முற்றியுள்ள நிலையில், மத்திய கிழக்கு கடற்பகுதியில் அமெரிக்கா போர்க்கப்பல்களை நிறுத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரானும் போருக்குத் தயாராகி வருவதால் பிராந்தியத்தில் போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.
பாதுகாப்பு கருதி ஈரானில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாகக் கிடைக்கும் விமானம் மூலம் அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அவசர உதவிக்கு தூதரக மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளலாம் என்றும், ஜனவரி 14, 2026 அன்று வெளியிடப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும் இந்திய குடிமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.