ஈரானில் பதற்றம் அதிகரிப்பால் இந்தியர்களுக்கு அவசர கால வெளியேற்ற அறிவுறுத்தல்
February 23, 2026

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் பதற்றம் உச்சத்தை தொட்டுள்ள நிலையில் அங்குள்ள இந்திய குடிமக்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. அவசர கால உதவியை நாட பிரத்யேக உதவி எண்களை வெளியிட்டுள்ள தூதரகம் அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
தற்போதைய சூழலில் போராட்டங்கள் நடைபெறும் இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி உள்ளூர் ஊடக செய்திகளை தொடர்ந்து கவனிக்குமாறும் இந்திய தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தூதரகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.