ஈரானிய அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாக பெஞ்சமின் நெதன்யாகு அதிரடி அறிவிப்பு

மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், ஈரானின் அணுசக்தி திட்டத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இஸ்ரேலிய தாக்குதலில் ஈரானின் முக்கிய அணுசக்தி விஞ்ஞானிகள் கொல்லப்பட்டதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இஸ்ரேலை அழிக்கும் நோக்கில் அணு குண்டுகளை தயாரிப்பதில் இந்த விஞ்ஞானிகள் முக்கிய பங்கு வகித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே சமயம், ஈரானின் புதிய உயர்மட்டத் தலைவர் மோஜ்தபா கமேனியை ‘பொம்மை’ என்று நெதன்யாகு விமர்சித்தார். போர் தொடங்கியதில் இருந்து அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என்றும், தற்போது அவர் புரட்சிகர பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறினார். ஈரான் மக்கள் சுதந்திரமான பாதையைத் தேர்ந்தெடுக்க இது ஒரு வாய்ப்பு என்றும், இஸ்ரேல் அவர்களுக்குத் துணையாக இருக்கும் என்றும் நெதன்யாகு மேலும் தெரிவித்தார்.