ஈரானின் மிரட்டலால் ரஷ்ய எண்ணெய் மீதான தடையை நீக்கியது அமெரிக்கா
March 13, 2026

ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் தாக்கப்பட்டால் வளைகுடா பிராந்தியத்தையே தீயிட்டுக் கொளுத்துவோம் என ஈரான் பகிரங்கமாக மிரட்டியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. இந்த கடுமையான சூழலைச் சமாளிக்க, ரஷ்ய எண்ணெயை விற்பனை செய்ய அமெரிக்கா அதிரடியாகத் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.
மார்ச் 12-ம் தேதிக்கு முன் கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய எண்ணெய் பொருட்களை ஏப்ரல் 11 வரை பரிவர்த்தனை செய்ய அமெரிக்க கருவூலத் துறை அனுமதித்துள்ளது. ஈரானின் ஆக்ரோஷமான பதிலடியால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவே அமெரிக்கா இந்த வியூகத்தை மேற்கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.