ஈரானின் தற்போதைய ஆட்சியை வீழ்த்துவோம் என அந்நாட்டின் புதிய தலைவர் மோஜ்தபாவிற்கு நெதன்யாகு கடும் எச்சரிக்கை

ஈரானின் தற்போதைய ஆட்சியை வீழ்த்துவோம் என அந்நாட்டின் புதிய தலைவர் மோஜ்தபாவிற்கு நெதன்யாகு கடும் எச்சரிக்கை

ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனியை ஒரு பொம்மை ஆட்சியாளர் என விமர்சித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தெஹ்ரானின் தற்போதைய அரசை வேரோடு அகற்றுவோம் என எச்சரித்துள்ளார். இந்த அடக்குமுறை ஆட்சிக்கு பாதுகாப்பு கிடையாது என்றும், அவர்களை வீழ்த்துவதில் இஸ்ரேல் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார். அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் கூட்டு நடவடிக்கையால் மத்திய கிழக்கு இனி பழைய நிலைக்குத் திரும்பப் போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், மோஜ்தபா கமேனி ஹோமுஸ் ஜலசந்தியை மூடுவதாகவும் மற்றும் அமெரிக்க இராணுவ தளங்களை அகற்றக் கோரியும் பதிலடி கொடுத்துள்ளார். தற்போதுள்ள போர் பதற்றம் மற்றும் உலகளாவிய எண்ணெய் நெருக்கடிக்கு மத்தியில், ஈரான் மக்கள் சுதந்திரத்திற்காக போராட முன்வர வேண்டும் என்று நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். இந்த மோதல் மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *