ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையத்தில் அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்த மத்திய கிழக்கில் போர் பதற்றம்
March 15, 2026

ஈரானின் மிக முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவின் மீது அமெரிக்கா நடத்தியுள்ள வான்வழித் தாக்குதலால் மத்திய கிழக்கில் போர் சூழல் தீவிரமடைந்துள்ளது. முன்னதாக பஹ்ரைன் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது. அதேபோல் இஸ்ரேலின் ஈலாட் நகரிலும் ஈரானிய ஏவுகணைகள் விழுந்து வெடித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவின் இந்த கடுமையான தாக்குதலையும் மீறி கார்க் தீவிலிருந்து சுமார் 2.7 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை இரண்டு டேங்கர் கப்பல்களில் ஏற்றியுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் இரண்டு வாரங்களை கடந்து நீடிக்கும் நிலையில் இந்த சமீபத்திய தாக்குதல்கள் உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன.