ஈராக்கில் வெடித்துச் சிதறிய அமெரிக்க விமானம் பின்னணியில் ஈரானின் ஏவுகணைத் தாக்குதலா
March 13, 2026

ஈராக்கில் நடுவானில் எரிபொருள் நிரப்பும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவின் KC-135 ரக விமானம் விபத்துக்குள்ளானதில் நான்கு வீரர்கள் உயிரிழந்தனர். மற்றொரு விமானம் பலத்த சேதத்துடன் தரை இறங்கியது. அமெரிக்கா இதை விபத்து என்று கூறினாலும், வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில் இது பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
ஈரானின் அதிநவீன ஏவுகணைகள் இந்த விமானத்தை தாக்கியிருக்கலாம் என பல தரப்பினர் கருதுகின்றனர். ஒரே நேரத்தில் இரண்டு விமானங்கள் பாதிப்புக்குள்ளானது தற்செயலான நிகழ்வாக இருக்க முடியாது என விமர்சனங்கள் எழுந்துள்ளன. மோதலை தவிர்க்கவே அமெரிக்கா உண்மையை மறைக்கிறதா என்ற கோணத்தில் தற்போது உலக அளவில் விவாதங்கள் தொடங்கிவிட்டன.