இஸ்ரேலை நிலைகுலைய வைத்த ஈரானின் டான்ஸிங் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேலை நிலைகுலைய வைத்த ஈரானின் டான்ஸிங் ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேலுக்கு எதிரான ‘ஆப்ரேஷன் ட்ரூ ப்ராமிஸ் 4’ போரில் ஈரான் முதன்முறையாக அதிநவீன ‘செஜ்ஜில் 2’ ஏவுகணையை ஏவித் தாக்கியுள்ளது. எதிரி நாட்டு ராடார்களை ஏமாற்றி, இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதால் இது ‘டான்ஸிங் ஏவுகணை’ என அழைக்கப்படுகிறது. திட எரிபொருளால் இயங்கும் இந்த ஏவுகணை, இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளை முறியடித்து கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 2,500 கி.மீ தூரம் வரை பாயும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணை, இஸ்ரேலின் முக்கிய ராணுவ உள்கட்டமைப்புகள் மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை குறிவைத்து தாக்கியதாக ஐஆர்ஜிசி தெரிவித்துள்ளது. 1990-களில் தொடங்கப்பட்ட இந்த ஏவுகணைத் திட்டம், தற்போது போர்க்களத்தில் முழு வீச்சில் பயன்படுத்தப்படுவது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *