இறந்தவர்களுடன் பேச வைக்கும் மாய போன் பூத்! ஜப்பானின் இந்த விசித்திர விண்ட் போன் ரகசியம்

இறந்தவர்களுடன் பேச வைக்கும் மாய போன் பூத்! ஜப்பானின் இந்த விசித்திர விண்ட் போன் ரகசியம்

ஜப்பானின் ஓட்சுச்சி நகரில் உள்ள ஒரு தனிமையான மலைப்பகுதியில் ‘விண்ட் போன்’ என்ற விசித்திரமான தொலைபேசி கூண்டு அமைந்துள்ளது. இது கம்பி இணைப்பு இல்லாத ஒரு சாதாரண போன் ஆகும், இதன் மூலம் மக்கள் தங்களுக்குப் பிடித்தமான இறந்தவர்களுடன் பேசுகிறார்கள். 2010 ஆம் ஆண்டில் புற்றுநோயால் தனது உறவினரை இழந்த இதாரு சசாகி என்பவர், பிரிவின் துயரத்தைக் குறைக்க இந்த புதுமையான முயற்சியைத் தொடங்கினார்.

இந்த போன் பூத் அமைந்துள்ள அமைதியான மலைப்பகுதி ஒரு மாயாஜால சூழலை உருவாக்குகிறது. அங்கு வீசும் பலத்த காற்று போன் ரிசீவரில் படும்போது ஒருவித விசித்திரமான ஒலி அலைகளை உருவாக்குகிறது. இது இறந்தவர்களின் குரலாகவே பலரால் கருதப்படுகிறது. அன்புக்குரியவர்களை இழந்து வாடும் மக்கள், இங்கு வந்து தங்கள் மனக்குமுறல்களைக் கொட்டி அழுது ஆறுதல் தேடிக்கொள்கின்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *