இரை தப்பிய ஆத்திரத்தில் கார் ஓட்டுநரை தாக்க முயன்ற பூனை! இணையத்தில் தீயாய் பரவும் பகீர் வீடியோ
December 21, 2025

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோவில், பூனை ஒன்று புறாவை கவ்விச் செல்லும்போது காரின் ஹார்ன் சத்தத்தால் மிரண்டு இரையை கோட்டைவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த பூனை, உடனடியாக கார் ஓட்டுநரை நோக்கி பாய்ந்து தனது கோபத்தை வெளிப்படுத்தியது.
காரின் கண்ணாடியின் மீது குதித்து ஓட்டுநரை மிரட்டும் வகையில் பூனை செய்த சாகசம் பார்ப்பவர்களை வியப்பிலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. உணவு கைநழுவிய கோபத்தில் அந்த பூனை காட்டிய ஆக்ரோஷமான எதிர்வினை தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது